இது தள்ளி வைப்புதான்; தள்ளுபடி அல்ல!
கொரோனாவின் கோர தாண்டவத்தால், நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிட்டது. சாதாரண மக்களில் இருந்து பெரிய நிறுவனங்கள் வரை வருவாய் இல்லாமல் தவிக்கிறார்கள்.;
ஏழை, நடுத்தர மக்கள் வீடு வாங்குவது, வாகனங்கள் வாங்குவது, அவசரச் செலவு போன்றவற்றுக்கு வங்கிக் கடனைத்தான் நம்பியிருக்கிறார்கள். இதுபோல, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்றாலும், வியாபாரம் செய்பவர்கள் என்றாலும், ஏன் பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்கள் என்றாலும், வங்கிகளில்தான் கடன் வாங்குகிறார்கள். இவ்வாறு கடன் வாங்கி அதற்கு வங்கிகள் விதிக்கும் வட்டியையும் சேர்த்து மாதத்தவணையில் திரும்பக்கட்டுகிறார்கள்.
கொரோனாவின் கோர தாண்டவத்தால், நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிட்டது. சாதாரண மக்களில் இருந்து பெரிய நிறுவனங்கள் வரை வருவாய் இல்லாமல் தவிக்கிறார்கள். பலர் வேலையிழப்புக்கும் ஆளாகி உள்ளனர். பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களின் சம்பளத்தையே குறைத்திருக்கிறது. ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கூடுதல் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு நிறுத்திவைத்திருக்கிறது. வருவாய் இல்லாமல் தவிக்கும் தனியார் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், வேறு வழியில்லாமல் ஆள்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வங்கிகளில் கடன் வாங்கிய ஏராளமானோர் மாதத் தவணையைக் கட்ட முடியாமல் திண்டாடுகிறார்கள்.
இதை எல்லாம் புரிந்த ரிசர்வ் வங்கி, முதலில் மார்ச் 1-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரையும், பின்புஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரையும் மாதத்தவணை கட்டுவதை 6 மாத காலத்திற்கு தள்ளிவைத்தது. கடனை வட்டியுடன் திருப்பிகட்டுவதற்கான மாதத்தவணையை 6 மாதம் தள்ளித்தான் வைத்திருக்கிறதே தவிர, தள்ளுபடி செய்யவில்லை. இந்த 6 மாதம் கட்ட வேண்டிய அசலும், வட்டியும் மொத்தம் உள்ள கடன் தொகையோடு சேர்க்கப்பட்டுவிடும். எனவே, கட்ட வேண்டிய வட்டிக்கும் வட்டி கட்ட வேண்டியநிலை வரும். இது வட்டிக்கு வட்டியாகும்.
இதுமட்டுமல்லாமல், 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்க வேண்டிய கடன்தொகை, ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிடும். இதனால்தான் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதிகள், இந்த விஷயத்தில் 2 கோரிக்கைகள் உள்ளன. ஒன்று, கடன் தவணை தள்ளி வைப்பு காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது. 2-வது, வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்வது என்று ஏற்கனவே கூறியிருந்தனர். இப்போது கடந்த வெள்ளிக்கிழமையன்று, கடன் தவணை தள்ளி வைப்பு மீது வட்டி வசூலிப்பது குறித்து, மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும்3 நாட்களுக்குள் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி விசாரணையை நாளை17-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. கடன் வாங்கியவர்கள் மனதில் உள்ள குரல், நீதிபதிகளின் கருத்தாக எதிரொலித்திருக்கிறது. மாதத்தவணை கட்டுபவர்கள் அசலை தள்ளுபடி செய்யச் சொல்லவில்லை. இந்த 6 மாத தவணைக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய கேட்கிறார்கள்.
ஊரடங்கு நேரத்தில் எந்த தொழிலும் நடைபெறாத நிலையில், வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்துவது என்பது இயலாத காரியம் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. ஆனால், வங்கிகளும், அரசு அதிகாரிகளும், இவ்வாறு கடன் தள்ளுபடி செய்யும் காலத்தில் வட்டியை ரத்து செய்யக்கூடாது. ஆண்டுதோறும் கடன்களுக்கான வட்டி வசூல் மூலமாகத்தான் வங்கிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. இதை வைத்துத்தான் டெபாசிட்டுகளுக்கு வட்டி மற்றும் வங்கிகளின் இயக்கச் செலவுகள் சமாளிக்கப்படுகின்றன. ஏற்கனவே, வட்டி குறைக்கப்பட்டுள்ளதால் இனிமேலும் ரத்து என்றால் இயலாது என்று தெரிவித்துள்ளனர். வட்டித்தள்ளுபடி என்பது கடன் வாங்கியவர்கள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் கலாசாரத்தையே சீர்குலைத்துவிடும் என்பதுவும் அவர்களது கருத்து. இந்தநிலையில், மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும், சுப்ரீம் கோர்ட்டும் ஒரு நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.