சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது.
‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் பள்ளிக்கூடத்துக்குள் சென்று கொண்டிருக்கும் 2 மாணவர்கள் தங்களுக்குள் சபரிமலை கோவில் பற்றி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதுபோல, கல்விக்கோவில் மீதும் கோர்ட்டின் பார்வைவிழும் என்று நம்புவோம் என்று கூறுவது சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறது.
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையின் சீற்றங்களை கண்டும், ஆபத்துக்களை கண்டும் அஞ்சி நடுங்கி, தன் பாதுகாப்பின்மையை உணர்ந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னையும் மீறிய சக்திகளை உதவிக்கு அழைக்கும்வகையில் வழிபடத் தொடங்கினான். அது உருவ வழிபாடாகவும், அருவ வழிபாடாகவும் வளர்ச்சி அடைந்தது. நம்பிக்கை இருப்பவனுக்கு கல்லும் கடவுள். புல்லும் பூஜை பொருள். வழிவழியாக வளர்ந்து வடிவம்பெற்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகள் மதத்துக்கு மதம், கோவிலுக்கு கோவில், இடத்துக்கு இடம், விக்கிரகத்துக்கு விக்கிரகம் என்று மாறுபடுகிறது. இந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் காலம்காலமாக பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த பாரம்பரிய அடிப்படையில் நடத்தும் வழிபாடுகள் சட்டத்துக்கும், விதிகளுக்கும், அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஏனென்றால், சிலநேரங்களில் பாரம்பரியமும், நம்பிக்கையும் சட்டத்தைவிட வலிமையானதாக இருக்கிறது. எனவே அரசாணைகளுக்கும், தீர்ப்புகளுக்கும் அப்பாற்பட்டதாக மக்களின் பாரம்பரிய வழிபாட்டு சடங்குகள் இருக்கின்றன. பரம்பரையாக ஒரேவழிபாட்டு முறையை பின்பற்றும் பக்தர்கள் அதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருசில கோவில்களுக்கு தனித்தனியான வழிபாட்டுமுறைகள் இருக்கின்றன.
திருச்செந்தூர் கோவில், சுசீந்திரம் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவில் என ஏராளமான கோவில்களில் வழிபடுவதற்கு ஆண்கள் சட்டை போட்டுக்கொண்டு உள்ளே வரக்கூடாது என்ற நடைமுறை இருக்கிறது. பக்தர்கள் மகிழ்ச்சியோடு அந்த நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள். அதுபோலத்தான் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லவேண்டும் என்றால் 48 நாட்கள் கடும்விரதம் இருக்கவேண்டும். உடலை, உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். அதிகாலையிலும், பொழுது அடைந்தபிறகும் குளிர்ந்தநீரில் குளிக்கவேண்டும். மது, மாது, மாமிசம் என்பது அறவே தவிர்க்கப்படவேண்டும். இதுமட்டுமல்லாமல், ‘சுவாமியே அய்யப்பா’ என்று தலையில் இருமுடி கட்டிக்கொண்டு மலையில் நடந்துசென்று 18 படி ஏறும்வரையில், அவர்கள் உள்ளத்தில் அய்யப்பனை தவிர வேறு எண்ணமே இருக்கக்கூடாது. அய்யப்பன் ஒரு கடும் பிரம்மச்சாரி. சபரிமலைக்கு செல்லும்வழி கடுமையான காட்டுப்பகுதி. 48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்கவேண்டிய நிலையில் பெண்களுக்கு அவர்கள் உடற்கூறு அனுமதிக்காது. இதுபோன்ற சில காரணங்களால்தான் சபரிமலை கோவிலுக்கு மட்டும் பெண்களுக்கு தடையே தவிர, மற்ற இடங்களில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் தாராளமாக பெண்கள் வழிபடும் முறை இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. சென்னையில் பெண்கள், ‘நாங்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லமாட்டோம்’ என்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்தநிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கருத்தைக்கேட்டு, இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா? என்பதை இந்த கோவிலை நிர்வகிக்கும் திருவனந்தபுரம் தேவஸ்தானம் போர்டு முடிவு செய்ய வேண்டும்.