மார்கழி மாத பிறப்பு: ராமேசுவரம் கோவில் நடைதிறப்பில் மாற்றம்

ராமேசுவரம் கோவில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2024-12-15 09:45 IST

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி ஒரு மாதம் மட்டும் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் நாளை(திங்கட்கிழமை) பிறப்பதை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் மாதம் 16-ந் தேதி குரோதி வருடம் மார்கழி 1-ந் தேதி பிறப்பதை தொடர்ந்து டிசம்பர் 16-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 13-ந் தேதி வரை தனுர் மாத பூஜையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும். நடைதிறந்து அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம் நடைபெறும்.

காலை 5 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் நடைபெற்று பூஜைகள் நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 7.30 மணிக்கு விளா பூஜையும், 10 மணிக்கு கால சந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், நண்பகல் 1 மணிக்கு கோவில் நடையும் சாத்தப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும். மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்று இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெற்று இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று நடை சாத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்