போர் மூளும் அபாயம்
பண்டைய காலம்தொட்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்திருக்கிறது.
பண்டைய காலம்தொட்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்திருக்கிறது. பிரதமர் நேருவும், சீன அதிபர் சூயன் லாயும் கைகோர்த்து, ‘‘இந்தி – சீனி பாய்... பாய்...’’ அதாவது, ‘‘இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள்’’ என்று முழக்கமிட்டது, வெறும் வார்த்தைகளால் வந்த முழக்கமல்ல. இருநாட்டு மனங்களின் ஆழத்தில் இருந்து வந்த அன்பின் வெளிப்பாடு அது.
1962–ம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடந்த போர், நீண்ட நெடுங்காலமாக இருந்த உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. தொடர்ந்து 1967, 87–ம் ஆண்டுகளில் சிறு சிறு ஊடுருவல்களும், மோதல்களும் இருந்தன. ஆனால், அதற்குப்பிறகு 1990–ம் ஆண்டு சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த நேரத்தில் இருநாடுகளுக்கிடையே நட்புறவு துளிர்த்தது. முதல் பதக்கத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனை வைத்து சீன அரசாங்கம் வழங்கியது, நட்புக்கு ஒரு அத்தியாயத்தை தொடங்கி வைத்தது. சமீபத்தில்கூட நரேந்திர மோடி சீனா சென்ற நேரத்திலும், சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த நேரத்திலும், இருநாடுகளுக்கிடையே ஒரு பரஸ்பர நல்லுறவையும், நட்பையும் வளர்த்தது. இந்த சூழ்நிலையில், திடீரென கடந்த ஒருமாதமாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் தலையெடுத்துள்ளது. பெய்ஜிங் ராணுவ வழியை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது என்பது போன்ற சீனாவின் அச்சுறுத்தல் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுவிடுமோ? என்ற கவலையை உலகுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லைப்பகுதியில் பூடான் நாட்டின் டோகா லா பீடபூமியில் சீனா ஒரு சாலையை அமைத்தது. பூடான் நாடு, இந்தியாவுடன் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதை தடுப்பது இந்திய ராணுவத்தின் கடமை என்று அந்த இடத்தை நோக்கி இந்திய ராணுவம் விரைந்தது. ஆனால் சீனா, இந்திய நாட்டு பதுங்கு குழிகளை தாக்கி, இந்திய யாத்திரிகர்கள் கைலாஷ் மானசரோவர் போவதற்கான நாதுலா கணவாய் வழியை அடைத்தது.
இந்த நிலையில், சீனா மேலும் ஒரு தேவையற்ற சிக்கலை உருவாக்குகிறது. சிக்கிம் என்பது இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே இந்தியாவும், சீனாவும் போட்ட ஒப்பந்தத்திலேயே முடிவான ஒன்றாகும். ஆனால், இப்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உள்ள எல்லைக்கோடு இங்கிலாந்து நாடு 1890–ம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தின்படி, சிக்கிம் நாட்டுக்குள் வருகிறது என்று புதிதாக கூறுகிறார்கள். சிக்கிம் என்பது இந்தியாவின் ஒருபகுதி என்று உலக நாடுகளுக்கு தெரியும். இப்போது திடீரென சீனா இப்படியொரு பிரச்சினையை கிளப்பி வருகிறது. இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று சீனாவும், சீன ராணுவம் வெளியேறவேண்டும் என்று இந்தியாவும் கூறிவருகிறது. எந்த பிரச்சினையென்றாலும், இந்தியா, சீனா மற்றும் மூன்றாவது நாடும் ஒன்றாக உட்கார்ந்து பேசி தீர்க்கவேண்டும் என்று 2012–ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்ட நிலையில், பூடானில் சீனா சாலை அமைப்பது நிச்சயமாக அந்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். சர்வதேச மரபுகளை மீறிய செயலாகும். எனவே, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலேயோ, தூதரக அதிகாரிகள் மட்டத்திலேயோ பேச்சுவார்த்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல், உடனடியாக இருநாட்டு பிரதமர்களும், இந்த பிரச்சினை குறித்து சுமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இருநாட்டு ராணுவமும் போரில் மோத வேண்டாம். இருநாட்டு தலைவர்களும் கைகோர்த்து ஒன்றாக உட்கார்ந்து பேசி, நேரு கண்ட கனவான இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள் என்ற உறவு மேலும் தழைத்து செழித்தோங்க வேண்டும்.