திருமலையில் சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம்

திருப்பதி திருமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவமும் ஒன்று.

Update: 2024-12-12 10:13 GMT

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு தெற்கு திசையில் சில மைல் தொலைவில், சேஷாசல வனப்பகுதியில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாத துவாதசி நாளில் சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம் இன்று (12.12.2024) நடைபெற்றது.

இதையொட்டி, பூஜைப் பொருட்கள், அபிஷேக பொருட்களுடன் அர்ச்சகர்கள் சக்கர தீர்த்தம் சென்று நரசிம்மர், ஆஞ்சநேயர் மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வராக புராணத்தின் படி, ஷேஷாசல மலைத்தொடரில் உள்ள ஏழு முக்கிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக சக்கர தீர்த்தம் கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்