இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருச்சேறை சாரநாதர் தெப்பத்திருவிழா. திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.;

Update: 2024-02-03 01:36 GMT

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, தை-20 (சனிக்கிழமை)

திதி: அஷ்டமி திதி பகல் 12.45-க்கு மேல் நவமி திதி

நட்சத்திரம்: விசாகம் நட்சத்திரம் இரவு (3.05)க்கு மேல் அனுஷம் நட்சத்திரம்

யோகம்: சித்தயோகம்

ராகு காலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருச்சேறை சாரநாதர் தெப்பத்திருவிழா. திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.

ராசிபலன்

மேஷம்

கடன் சுமை குறைய புதிய யுக்திகளை கையாளும் நாள். கட்டிட பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்

அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழிலுக்கு சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு.

மிதுனம்

வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு.

கடகம்

சொந்த பந்தங்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

சிம்மம்

விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்ட நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

கன்னி

விரயங்கள் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் உண்டு. ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணைவர். பாகப்பிரிவினை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

துலாம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் ரீதியான பயணம் உண்டு.

விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

தனுசு

தடைகள் விலகும் நாள். தன வரவு திருப்தி தரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண் பர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.

மகரம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். அறிமுகமில்லாதவர்கள் கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். ஆபரண பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். பண வரவு திருப்தி தரும்.

கும்பம்

வாய்ப்புகள் அலை மோதும் நாள். அன்னியதேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். வியாபார விரோதம் விலகும். சங்கிலி தொடர்போல வந்த கடன்சுமை குறையும்.

மீனம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. குடும்ப பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறைகண்டு பிடிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்