இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மிதுன ராசிக்காரர்களுக்கு வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை.
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது வருடம் தை மாதம் 25-ந் தேதி வியாழக்கிழமை.
திதி: திரயோதசி திதி காலை(9.09)க்கு மேல் சதுர்த்தி திதி.
நட்சத்திரம்: உத்ராடம் நட்சத்திரம் இரவு(1.12) க்கு மேல் திருவோணம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம்,
ராகுகாலம்: மதியம் : 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் :
திருமயம் ஆண்டாள் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் மலரங்கி சேவை. திருமாலிஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு.
இன்றைய ராசிபலன் :
மேஷம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள், உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள், தொழில் முன்னேற்றம் உண்டு, தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். நேற்றுப் பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.
மிதுனம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளில் குறை கூறுவர். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
கடகம்
வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.
சிம்மம்
அலைபேசிவழி தகவலால் அனு கூலம் கிட்டும் நாள். ஆற்றல் மிக்க வர்களின் ஒத்துழைப்பால் காரிய மொன்று கைகூடும். உத்தியோகத் தில் சக பணியாளர்களும் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
கன்னி
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.
துலாம்
நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நாள். வரவு திருப்தி தரும். முன்னேற்றம் கூட புதிய திட்டம் தீட்டுவீர்கள். உறவினர்களின் பகை மாறும். வாகன பராமரிப்பு சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
விருச்சிகம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
முடியாத காரியத்தை முடித்து கொடுக்க முன்வரும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தடை அகலும்.
மகரம்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
வெளிவட்டார பழக்கம் விரிவடையும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மீனம்
நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்பச்சுமை கூடும்.