இந்த வார விசேஷங்கள்: 10-12-2024 முதல் 16-12-2024 வரை
டிசம்பர் 13-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.;
10-ந் தேதி (செவ்வாய்)
* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ரத உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் யானை வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
11-ந் தேதி (புதன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருவரங்கம் நம்பெருமாள், சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வியாழன்)
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலையில் கண்ணாடி விமானத்தில் பவனி.
* திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
13-ந் தேதி (வெள்ளி)
* திருக்கார்த்திகை தீபம்.
* பிரதோஷம்.
* சிவன் கோவில்களில் திருக்கார்த்திகை திருநாள் வழிபாடு.
* குரங்கணி முத்து மாலை அம்மன் கோவிலில் நாராயண சுவாமி வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (சனி)
* தத்தாத்ரேய ஜெயந்தி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தீர்த்தவாரி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையான், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.
*மேல்நோக்கு நாள்
15-ந் தேதி (ஞாயிறு)
* பவுர்ணமி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் கிரிவலம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
16-ந் தேதி (திங்கள்)
* தனுர் மாத கால பூஜை. சகல ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடம் தொடக்கம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.