இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Update: 2024-01-12 01:17 GMT

12.1.2024 சோபகிருது வருடம்

மார்கழி மாதம் 27-ந் தேதி வெள்ளிக்கிழமை.

உத்ராடம் நட்சத்திரம் இரவு(5.06) க்கு மேல் திருவோணம் நட்சத்திரம்.

சித்தயோகம்: மாலை(5.06) க்கு மேல் மரணயோகம். மேல்நோக்குநாள்.

திதி

இன்று மாலை 4.40 வரை பிரதமை பின்பு துவிதியை

நட்சத்திரம்:

இன்று மாலை 05.41 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

அமிர்த யோகம்

இன்று காலை 05.41 வரை சித்தயோகம் பின்பு மரண யோகம்

ராகுகாலம் : காலை: 10.30-12.00

குளிகை: காலை 7.30-9.00

எமகண்டம்: மாலை 3.00- 4.30

சந்திராஷ்டமம்: மிதுனம்.

தினபலன்

மேஷம்

நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வெறுத்து ஒதுக்கிய சிலரே உங்களி | டம் விரும்பி வந்து சேரலாம். அதி கம் செலவாகும் என்று நினைத்த காரியம் குறைந்த செலவில் முடியும்.

துலாம்

எதிரிகள் உதிரியாகும் நாள். இல் லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். வருமானம் திருப்தி தரும். உடன்பிறப் புகள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இழுபறியாக இருந்த வழக்கு கள் நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள் வாகன யோகம் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய திட் டங்களை தீட்டுவீர்கள். உறவினர் களின் உதவி கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். வரன் கள் வாயில் தேடி வரும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். மறதியால் சில தொல்லை களுக்கு ஆட்படலாம். எதிர்பார்த் தது போல எதுவும் முடியவில் லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

கடகம்

இனிய தகவல் இல்லம் தேடி வரும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு முக்கிய புள்ளிகள் முன் வந்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர் களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்

சிம்மம்

ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். ஆரோக்கி யம் சீராகும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டை சீர மைப்பதில் அக்கரை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

நிதானத்துடன் செயல்படுவ |தன் மூலம் நிம்மதி காணும் நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக பயணம் உண்டு.

மகரம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீட்டு உபயோகப் பொருட் | களை வாங்குவதில் விரயம் ஏற் படலாம். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வ தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

சேமிப்பு உயரும் நாள். நேற் றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும், வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள்.

கன்னி

வாய்ப்புகள் வாயிற்கதவைத் பயணங்களால் தட்டும் நாள். தொல்லை தந்தவர் கள் விலகுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

மீனம்

பலன் கிட்டும்நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.

பொது பலன்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். மீன ராசிக்காரர்களுக்கு பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள்.

Tags:    

மேலும் செய்திகள்