இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

Update: 2024-01-06 02:03 GMT

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது ஆண்டு, மார்கழி-21 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: தசமி இரவு 9.55 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: சுவாதி இரவு 7.05 மணி வரை பிறகு விசாகம்

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. மதுரை செல்லத்தம்மன் பவனி.

இன்றைய ராசிபலன் :

மேஷம் : மதிநுட்பத்துடன் செயல்படும் நாள். கசந்த காலங்கள் வசந்த காலங்களாக மாறும், வியாபார விரோதம் விலகும். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள்.

ரிஷபம் : நன்மைகள் நடைபெறும் நாள். இடம், பூமியால் லாபம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்திகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

மிதுனம் : முன்னேற்றம் கூடும் நாள். யாருடைய பணமாவது உங்கள் கையில் புரளும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கடகம் : புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும் நாள். நீண்ட நாளைய வழக்குகள் முடிவிற்கு வரும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம் : சிந்தனைகள் ஜெயமாகும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சுபச்செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி : தாமதமான பணிகள் தடையின்றி நடைபெறும் நாள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

துலாம் : முடியாத காரியங்களைக்கூட முடித்துக்காட்டும் நாள். இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாக வரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

விருச்சிகம் : யோகமான நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட செய்வீர்கள். சகோதர வழியில் சாதகமான பலன் கிடைக்கும். தனவரவு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு : நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாகப் பிரிவினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

மகரம் : நல்லவர்களின் சந்திப்பால் நலம் காணும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணைவழியே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாலைநேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

கும்பம் : உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம் : வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: மீனம்.

Tags:    

மேலும் செய்திகள்