இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இன்று சர்வ ஏகாதசி. கூபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

Update: 2023-12-08 03:17 GMT

படம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-22 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி நாளை விடியற்காலை 5.24 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: அஸ்தம் காலை 8.24 மணி வரை. பிறகு சித்திரை.

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

இன்று சர்வ ஏகாதசி. கூபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப் பெருமான் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்:

மேஷம் : அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம் : மதிப்பும். மரியாதையும் உயரும் நாள். பிரியமானவர்களுடன் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம் : குடும்ப ஒற்றுமை கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

கடகம் : மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டும். கூட்டு தொழில் புரிவோர் ஏற்றம் பெறுவர்.

சிம்மம் : மனச்சுமை குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

கன்னி : முயற்சி கைகூடும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சொத்துக்கள் விற்பனையால் லாபம் உண்டு.

துலாம் : கடினமான காரியத்தைக்கூட எளிதாக செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

விருச்சிகம் : பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி மூலம் நல்ல செய்தியொன்று வந்து சேரும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு : வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீண்பழிகள் அகலும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வீடு வாங்கும். யோகம் உண்டு. கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும்.

மகரம் : நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும். இதுவரை இருந்த பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வியாபார முன்னேற்றத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

கும்பம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். கொள்கை பிடிப்பை நண்பர்களுக்காக தளர்த்திக்கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் செயல்பாட்டில் குறை காண்பர், விரயங்கள் அதிகரிக்கும்.

மீனம் : போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உணவில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல்நலம் சீராகும்.

சந்திராஷ்டமம் : இரவு 8.57 வரை கும்பம். பிறகு மீனம்.

Tags:    

மேலும் செய்திகள்