இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

Update: 2023-12-07 03:33 GMT

படம்: ஆலங்குடி குருபகவான்

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-21 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: தசமி நாளை விடியற்காலை 4.56 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: அஸ்தம் (முழுவதும்).

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருநாகேஸ்வரம் நாகநாதர் பவனி. ஸ்ரீவாஞ்சியம் முருகப் பெருமான் புறப்பாடு. அனாயநாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான் தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன் :

மேஷம் : சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும் நாள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.

ரிஷபம் : செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். உத்தியோகத்தில் இடமாற்றம், பற்றிய சிந்தனை ஏற்படும்.

மிதுனம் : வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர்.

கடகம் : முன்னேற்றம் கூடும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புதுமுயற்சி கைகூடும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.

சிம்மம் : மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் குறையும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். செலவுகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

கன்னி : கலக்கம் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். தொழில் விருத்தி உண்டு. தொட்டது துலங்கும் நாள்.

துலாம் : எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

விருச்சிகம் : யோகமான நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுணங்கிய காரியங்கள் இன்று சுறுசுறுப்பாக நடைபெறும்.

தனுசு : சகோதர வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். வருமானம் இரட்டிப்பாகும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பணிபுரியுமிடத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம் : பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும் பயணத்தால் பலன் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். உத்தியோக உயர்வு உண்டு.

கும்பம் : வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். நண்பர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். வியாபார போட்டி உண்டு. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

மீனம் : தனவரவு திருப்தி தரும் நாள். எண்ணிய காரியம் நிறைவேற அன்னியர் ஆதரவு கிடைக்கும். பகை நட்பு ஒன்று உருவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : கும்பம்

Tags:    

மேலும் செய்திகள்