இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.

Update: 2023-12-17 04:28 GMT

இன்றய பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, மார்கழி-1 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பஞ்சமி இரவு 8.55 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: திருவோணம் காலை 7.57 மணி வரை பிறகு அவிட்டம்

யோகம்: அமிர்த, மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

முக்கிய நிகழ்வுகள் 

அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாரா யணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆவுடை யார்கோவில் மாணிக்க வாசகர் உற்சவம் ஆரம்பம். வெள்ளிச் சிவிகையில் புறப்பாடு. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ள ஸ்ரீ அனுமருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன் 

மேஷம்

மனக்குழப்பம் அகலும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தடை அகலும்.

ரிஷபம்

கணிசமான தொகைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.

மிதுனம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தூரத்து உறவினர்களால் தொல்லை ஏற்படும். வரவைவிட செலவு கூடும்.

கடகம்

மாலை நேரம் மனக்கலக்கம் ஏற்படும் நாள். சிந்தித்து செயல்படுவது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும்.தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது.

சிம்மம்

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்துமுடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.

கன்னி

ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.

துலாம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

விருச்சகம்

நினைத்தது நிறைவேறும் நாள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர். திருமண முயற்சி வெற்றி தரும்.

தனுசு

கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வீர்கள்.

மகரம்

சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். செயல்பாட்டில் அவசரம் காட்ட வேண்டாம். பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு அலைபேசி வழியே அனுகூல தகவல் வந்து சேரும்.

கும்பம்

பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வியாபார விருத்தியுண்டு. உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மீனம்

வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர்.

Tags:    

மேலும் செய்திகள்