இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்றுக்கருத்துடையோரால் வீட்டு பிரச்சினை அதிகரிக்கும்.

Update: 2024-02-11 02:13 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் தை மாதம் 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.

திதி: துவிதியை திதி இரவு (12.32)க்கு மேல் திருதியை திதி.

நட்சத்திரம்: சதயம் நட்சத்திரம் இரவு (6.40)க்கு மேல் பூரட்டாதி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம், மேல்நோக்குநாள்.

சூலம்: மேற்கு

ராகுகாலம்: காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

இன்று சந்திர தரிசனம். சுப முகூர்த்த தினம். சூரியனார் கோயில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பால் அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தொட்டித் திருமஞ்சனம், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருவீதி உலா. அப்பூதி நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்:

மேஷம்:  நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். முக்கிய பிரமுகர் ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.

ரிஷபம்:  இனிக்கும் செய்திகள் இல்லம் தேடி வரும் நாள் ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தொலைபேசி மூலமாக வாழ்த்துவர்.

மிதுனம்:  எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர்.

கடகம்:  யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. நண்பர்களால் மனக்கசப்பு ஏற்படலாம்.

சிம்மம்:  மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்றுக்கருத்துடையோரால் வீட்டு பிரச்சினை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உடல் நலத்திற்காக செலவிடுவீர்கள்.

கன்னி:  உற்சாகமாக செயல்படும் நாள். சேமிப்புகள் கரைந்தாலும் செலவிற்கு பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

துலாம்:  அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும், புதிய மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சிகம்:  எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழியில் சந்தோஷம் தரும் செய்திகளை கேட்கலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

தனுசு:  முன்னேற்றப்பாதையில் செல்ல முக்கிய புள்ளிகள் உதவும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

மகரம்:  நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

கும்பம்:  சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மற்றவர்களின் யோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்:  மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டமம்: கடகம்.

Tags:    

மேலும் செய்திகள்