இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள்.

Update: 2024-04-28 01:38 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.

திதி: சதுர்த்தி திதி காலை(7.06)க்கு மேல் பஞ்சமி திதி

நட்சத்திரம்: மூலம் நட்சத்திரம் இரவு(3.11)க்கு மேல் பூராடம் நட்சத்திரம்

யோகம்: அமிர்தயோகம் இரவு (3.11)க்கு மேல் சித்தயோகம். கீழ்நோக்குநாள். கரிநாள்.

சூலம்: மேற்கு

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

இன்றைய தினப்பலன்:

மேஷம்: தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் பணி சார்ந்த பிரச்சினைகளுக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

ரிஷபம்: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது, வெளியூரிலிருந்து விமர்சனங்கள் வரலாம்.

மிதுனம்: அலைச்சல் கூடும் நாள். அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

கடகம்: விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் செய்யும் வேலையில் திருப்தியற்ற எண்ணம் உருவாகும்.

சிம்மம்: இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

கன்னி: அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

துலாம்: நிதி நிலை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.

விருச்சிகம்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.

தனுசு: பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மகரம்: கல்யாண வாய்ப்புக் கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு.

கும்பம்: குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி தாமதப்படும். உடன்பிறப்புகள் வழியே விரயம் உண்டு.

மீனம்: பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நலம் சீராகும்.

சந்திராஷ்டமம்: ரிஷபம்.

Tags:    

மேலும் செய்திகள்