இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருவாதிரை, புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள்.

Update: 2024-04-10 00:53 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 28-ந்தேதி புதன்கிழமை.

திதி: துவிதியை திதி இரவு(8.27)க்கு மேல் திருதியை திதி.

நட்சத்திரம்: அசுவினி நட்சத்திரம் காலை (7.08)க்கு மேல் பரணி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். கீழ்நோக்குநாள்

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

நல்லநேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

திருவாதிரை, புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். திருப்புவனம் கோதண்டராம சுவாமி புறப்பாடு. திருப்போரூர் முருகன் பாலாபிஷேகம். அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி விழா.

ராசிப்பலன்:

மேஷம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

ரிஷபம்

தேக்கநிலை மாறி ஊக்கமுடன் செயல்படும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

மிதுனம்

புதிய பாதை புலப்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர் பகை மாறும். நட்பால் நன்மை உண்டு.

கடகம்

யோகமான நாள். மங்கல ஒசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு. இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள் சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

எதிரிகளின் பலம் கூடும் நாள். இல்லத்தில் அமைதி குறையும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

துலாம்

மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். மனை தேடி மங்கலச் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்

வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். பயணங்களால் பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

தனுசு

தடைகள் அகலும் நாள். தன வரவு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி யோசிப்பீர்கள்.

மகரம்

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கும்பம்

மனக்கலக்கம் அகலும் நாள். தேவைகள் பூர்த்தியாகத் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பயணத்தால் பலன் உண்டு. யாருக்கும் பணப்பொறுப்புகள் சொல்லும் முன் யோசிக்கவும்.

மீனம்

வசதிகள் பெருகும் நாள். வருமானம் உயரும். வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். ஆடம்பரப் பொருட் கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்