இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.;
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை.
சதுர்த்தி திதி மாலை(6.03)க்கு மேல் பஞ்சமி திதி. விசாகம் நட்சத்திரம் மாலை(6.24)க்கு மேல் அனுஷம் நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்குநாள். கீழ்நோக்குநாள்.
நல்ல நேரம்: காலை 9.30-10.30 : மாலை : 4.30 - 5.30
ராகுகாலம் : காலை: 10.30-12.00
எமகண்டம் : மாலை: 3.00-4.30
குளிகை : 7.30-9.00
வாரசூலை: மேற்கு
சூரிய உதயம் : 6.23
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
திருப்பரங்குன்றம் முருகன் வைரத்தேர். சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று விழா. திருத்தணி முருகன் கிளி வாகன சேவை. புனிதவெள்ளி, அரசு விடுமுறை.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர்கள் கூடப் பகையாகலாம்.
ரிஷபம்: பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள், முயற்சி வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் தோள் கொடுத்து உதவுவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்: எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடை பெறும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கடகம்: குடும்பச்சுமை கூடும் நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். வரவு திருப்தி தரும்.
சிம்மம்: நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்களின் உதவியோடு தொழி லில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. ஆரோக்கியம் சீராகும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கன்னி: கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்கள் லாபம் தருவதாக அமையும்.
துலாம்: வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும், உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
விருச்சிகம்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர், தொழில் வளர்ச்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்துடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
தனுசு: யோகமான நாள். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
மகரம்: புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம். ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கட்டிடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
கும்பம்: தடைகள் விலகும் நாள். திடீர் வரவு உண்டு. வியாபாரத்தில் ஏற்பட்ட விரோதம் அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.
மீனம்: நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கோவில் வழிபாட்டால் குதூகலகம் காண்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
பொதுப்பலன்:
கார்த்திகை, உத்ரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதனை படைக்கும் நாள்.
சந்திராஷ்டமம்: பகல் 12.04 வரை மீனம்; பிறகு மேஷம்.