இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சென்னை மல்லீஸ்வரர் விழா தொடக்கம்;

Update: 2024-03-15 03:04 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 2-ந்தேதி வெள்ளிக்கிழமை.

திதி: சஷ்டி திதி இரவு (3.52)க்கு மேல் சப்தமி திதி.

நட்சத்திரம்: கார்த்திகை நட்சத்திரம் இரவு(9.25)க்கு மேல் ரோகிணி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம் இரவு(9.25)க்கு மேல் மரணயோகம். கீழ்நோக்குநாள்.

சூலம்: மேற்கு

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

நல்ல நேரம்: மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சென்னை மல்லீஸ்வரர் விழா தொடக்கம். இன்று சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலைதிருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ரசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.

ரிஷபம்

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரலாம்.

மிதுனம்

நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பணி உயர்வு பற்றிய தகவல் வரலாம். சுபகாரியப்பேச்சு முடிவாகும்.

கடகம்

கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட மனகசப்பு விலகும். உத்தியோக முயற்சி பலன் தரும்.

சிம்மம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

கன்னி

நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைக் கொடுக்கும் நாள். நாடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். விரயம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

துலாம்

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

விருச்சிகம்

முன்னேற்றம் கூடும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக அமையும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

தனுசு

வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பப் பிரச்சினைக்குத் தீர்வு காண சில அனுபவமிக்கவர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

மகரம்

மனக்குழப்பம் அகலும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

கும்பம்

மதிப்பும் , மரியாதையும் உயரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு வந்தாலும் அதை மீறிய செலவுகளும் உருவாகும். நண்பர்கள் பகையாவர்.

சந்திராஷ்டமம் : துலாம்

Tags:    

மேலும் செய்திகள்