இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் மாசி மாதம் 16-ந்தேதி புதன்கிழமை.
திதி: சதுர்த்தி திதி இரவு (1.59)க்கு மேல் பஞ்சமி திதி
நட்சத்திரம்: அஸ்தம் நட்சத்திரம் காலை (6.02)க்கு மேல் சித்திரை நட்சத்திரம்.
யோகம்: மரண யோகம். காலை(6.02)க்கு மேல் சித்தயோகம். கரிநாள். சமநோக்கு நாள்.
சூலம்: வடக்கு
ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார், கோவை கோனியம்மன் தேரோட்டம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர், திருநாறையூர் பொள்ளாப் பிள்ளையார், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம். திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் வசந்த உற்சவம். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். வேதாரண்யம், திருவாரூர் கோவில்களில் சிவபெருமான் புறப்பாடு. நத்தம் மாரியம்மன் மஞ்சள் நீராட்டு, புஷ்பப் பல்லக்கில் பவனி. இன்று சங்கடஹர சதுர்த்தி.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: நட்பால் நன்மை ஏற்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்: தெய்வ நம்பிக்கை கூடும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். திறமைமிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர்.
மிதுனம்: யோகமான நாள். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமாலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையலாம். குடும்பச்சுமை கூடும். மற்றவர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
சிம்மம்: வருமானம் உயரும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
கன்னி: சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்: முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சொந்தங்களின் பாராட்டு கிடைக்கும். நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். பொருளாதார நிலை உயரும்.
விருச்சிகம்: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வருமானம் இருமடங்காகும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு: தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். எதிரிகள் விலகுவர். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
மகரம்: பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.
கும்பம்: முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே கடமையில் தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினை நீடிக்கும்.
மீனம்: லாபம் வந்து சேரும் நாள். காரிய வெற்றிக்கு அனுபவமிக்கவர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
சந்திராஷ்டமம்: இரவு 7.01 வரை கும்பம்; பிறகு மீனம்.