இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி கூடும் நாள்.

Update: 2024-02-15 01:29 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் மாசி மாதம் 3-ந்தேதி வியாழக்கிழமை.

திதி: சஷ்டி திதி மாலை(4.01)க்கு மேல் சப்தமி திதி.

நட்சத்திரம்: அஸ்வினி நட்சத்திரம் பகல்(2.52)க்கு மேல் பரணி நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம் பகல்(2.52)க்கு மேல் சித்தயோகம். சமநோக்குநாள்

சூலம்: தெற்கு

ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நத்தம் மாரியம்மன் திருவீதி உலா. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்தில் திருவீதி உலா. திருவொற்றியூர், விருத்தாசலம் கோவில்களில் சிவபெருமான் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப்பெருமாள் உற்சவம் ஆரம்பம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

ரிஷபம்: வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

மிதுனம்: இடம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்களில் இனிதே நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக செலவிடுவீர்கள்.

கடகம்: எதிர்பாராத நன்மைகள் இல்லம் வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.

கன்னி: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.

துலாம்: கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நிதி நிலை உயரும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.

தனுசு: புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் அகலும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர்.

மகரம்: தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தன வரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமுகமாக முடியும்.

கும்பம்: பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு.

மீனம்: உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர், குடும்பத்தில் அமைதி கூடும்.

சந்திராஷ்டமம்: கன்னி.

Tags:    

மேலும் செய்திகள்