இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், சஷ்டி விரதம். நலன்கள் வந்து சேர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள்.

Update: 2024-01-16 03:27 GMT

16.1.2024 சோபகிருது வருடம் தை மாதம் 2-ந் தேதி செவ்வாய்க் கிழமை. பஞ்சமி திதி காலை(7.02) க்கு மேல் சஷ்டி திதி. பூரட்டாதி நட்சத்திரம் காலை(10,50) க்கு மேல் உத்திரட்டாதி நட்சத்திரம். மரண யோகம் காலை(10.50) க்கு மேல் அமிர்தயோகம். கீழ்நோக்குநாள். மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், சஷ்டி விரதம். நலன்கள் வந்து சேர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள்.

நல்ல நேரம்:

காலை: 7.30-8.30

மாலை: 4.30-5.30

ராகுகாலம்: 3.00-4.30

எமகண்டம் : காலை 9.00-10.30

குளிகை: 12.00-1.30

வாரசூலை: வடக்கு

சூரிய உதயம்: 6.42

அதிர்ஷ்ட எண்கள் : 2,5,7.

இன்றைய ராசிபலன்

மேஷம்

நந்தியை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத் தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

ரிஷபம்

ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறும் நாள்.நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும். தாமதப்பட்ட காரியம் இன்று நடை பெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படும்.

கடகம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வீடு கட்டும் பணியில் மும்முரம் காட்டுவீர்கள். பிறர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

சிம்மம்

யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆலய வழிபாடு அமைதி தரும். சில பிரச்சினைகளை கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. ஓய்வில்லாமல் உழைத்தாலும் நிறைவு இருக்காது.

கன்னி

சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களை தீட்டு வீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நம்பிக்கைக் குரியவர்கள் நல்ல தகவலை தருவர்.

துலாம்

புதிய பாதை புலப்படும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

விருச்சிகம்

நன்மைகள் வந்து சேர நந் தீஸ்வரரை வழிபட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

தனுசு

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை தகர்த்தெறி வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப் பதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்

அரைகுறையாக நின்ற பணி தொடரும் நாள். வியாபார முன் னேற்றம் கருதி புதிய நண்பர்க ளை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் உத்தியோக பிரச்சினை தீர வழிகாட்டும்.

கும்பம்

கோவில் வழிபாட்டால் குறைகள் அகலும் நாள். செல்வ நிலை உயரும் திடீர் முன்னேற்றம் உண்டு. செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். உடல் நலனில் கவனம்தேவை. பயணம் பலன் தரும்.

மீனம்

வளர்ச்சி கூடும் நாள். நண்பர் களோடு இருந்த பிரச்சினை சமாதான மாக முடியும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

பொதுப்பலன்

கார்த்திகை, உத்ரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். கன்னிராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.

சந்திராஷ்டமம்: சிம்மம்.

Tags:    

மேலும் செய்திகள்