இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்,
சோபகிருது ஆண்டு, மார்கழி-5 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி காலை 11.53 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.20 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் காலையில் வெள்ளச்சிவிகை, மாலையில் சிவபூஜை செய்தருளல். தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் பவனி. வாயிலார் நாயனார் குருபூஜை. திருகுற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் வீதி உலா. ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றய ராசிபலன்
மேஷம்
பரபரப்பாக செயல்படும் நாள். பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
ரிஷபம்
திறமை வெளிப்படும் நாள் பயணத்தில் பிரபலமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்கும் சிந்தனை மேலோங்கும். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
மிதுனம்
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். நாளை வரும் என்று நினைத்த பணம் இன்றே வரலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
கடகம்
நன்மைகள் நடைபெறும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பூமி விற்பனையால் லாபம் உண்டு.
சிம்மம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களால் கையிருப்பு கரையலாம். வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலத்தில் அச்சுறுத்தல் தோன்றும் மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
கன்னி
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். அலுவலகப்பணிகள் துரிதமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.
துலாம்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்யப் புது முயற்சி எடுப்பீர்கள். எதிர்பாராத தொகை கைக்கு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை கைகூடும்.
விருச்சிகம்
பணவரவு திருப்தி தரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வி.ஐ.பி.க்கள் சந்திப்பு உண்டு. தொழில் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
தனுசு
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி கைகூடும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள்.
மகரம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வாகன பராமரிப்பு செலவு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
கும்பம்
உறவினர் பகை அகலும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தியொன்று வரலாம்.தொழில் முன்னேற்றம் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வருமான பற்றாக்குறை அகலும்.
மீனம்
செல்வநிலை உயரும் நாள். திருமண பேச்சுகள் முடிவாகும். தொழில் வெற்றிநடை போடும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.