இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு யோசிக்காது செய்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.

Update: 2023-10-27 00:15 GMT

27.10.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 10-ந் தேதி வெள்ளிக்கிழமை . திரயோதசி திதி காலை (6.05)க்கு மேல் சதுர்த்தசி திதி. உத்ரட்டாதி நட்சத்திரம் காலை (9.18)க்கு மேல் ரேவதி நட்சத்திரம். சித்தயோகம் காலை (9.18)க்கு மேல் அமிர்தயோகம். மேல்நோக்குநாள். முகூர்த்தநாள்.

நல்லநேரம் : காலை : 9.15-10.15, மாலை : 4.45-5.45

ராகுகாலம் : மதியம்: 10.30-12.00

எமகண்டம் : காலை : 3.00-4.30

குளிகை : காலை: 7.30-9.00

வாரசூலை : மேற்கு

சூரிய உதயம் : 6.11

அதிர்ஷ்ட எண்கள் : 3,6,9.

தினப்பலன்

மேஷம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக நண்பர்கள் இருப்பர். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் நடைபெறும்.

ரிஷபம்

புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

மிதுனம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

கடகம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும். வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

சிம்மம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று நீடிக்கும். பயணங்கள் பலன் தராது.

கன்னி

யோகமான நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்துகளால் லாபம் உண்டு.

துலாம்

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். நாணய பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். விவாக பேச்சுகள் முடிவடையும்.

விருச்சிகம்

உற்சாகம் அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உயரதிகாரிகளால் நன்மை உண்டு. காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். கல்யாண கனவுகள் நனவாகும்.

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

மகரம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வேலைப்பளு கூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். தொழில் பங்குதார்களால் தொல்லை அதிகரிக்கும்.

கும்பம்

விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி உண்டு.

மீனம்

தன்னம்பிக்கை கூடும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கலாம்.

பொதுப்பலன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு யோசிக்காது செய்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். கும்ப ராசிக்காரர்களுக்கு கொடுக்கல், வாங்கல்கள் சரளமாக இருக்கும் நாள்.

சந்திராஷ்டமம்: சிம்மம்.

Tags:    

மேலும் செய்திகள்