இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்

கார்த்திகை, உத்ரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள்.

Update: 2023-10-26 00:26 GMT

26.10.2023 சோப கிருது வருடம் ஐப்பசி மாதம் 9-ந் தேதி வியாழக்கிழமை. துவாதசி திதி காலை (8.13)க்கு மேல் திரயோதசிதிதி. பூரட்டாதி நட்சத்திரம் காலை (10.44)க்கு மேல் உத்திரட்டாதி நட்சத்திரம். சித்தயோகம். கீழ்நோக்குநாள். பிரதோஷம். நலங்கள் வந்து சேர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள்.

நல்லநேரம் : காலை : 10.45-11.45, மாலை : 4.00-5.00

ராகுகாலம் : மதியம்: 1.30-3.00

எமகண்டம் : காலை : 6.00-7.30

குளிகை : காலை: 9.00-10.30

வாரசூலை : தெற்கு

சூரிய உதயம் : 6.11

அதிர்ஷ்ட எண்கள் : 3,5,8.

தினப்பலன்

மேஷம்

உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

ரிஷபம்

புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி கைகூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மிதுனம்

உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கலாம். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.

கடகம்

சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படைய வேண்டிய நாள். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபார ரீதியாக எடுத்த புதுமுயற்சியில் அனுகூலம் உண்டு.

சிம்மம்

காரிய தடையால் கவலைகள் அதிகரிக்கும் நாள். கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். தொழில் தொடர்பாக அலைச்சல்களை சந்திப்பீர்கள். பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

கன்னி

இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற முன்வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.

துலாம்

சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். தனவரவில் தடை ஏற்படும். உதவிக்கரம் நீட்டுவதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் வீண் பழிகள் ஏற்படலாம்.

விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டார பழக்கம் சிறப்பாக அமையும். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துகளுக்கு செவிசாய்ப்பர். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். விலை மதிப்பு மிக்க பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்துமுடிப்பீர்கள்.

மகரம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்க அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். தொழிலில் தனலாபம் ஏற்படும்.

கும்பம்

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருவீர்கள். இடம், பூமி வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மீனம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

பொதுப்பலன்

கார்த்திகை, உத்ரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சிம்ம ராசிக் காரர்களுக்கு பெருமைகள் குவிய பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள்.

சந்திராஷ்டமம்: சிம்மம்.

Tags:    

மேலும் செய்திகள்