இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணவரவு திருப்தி தரும் நாள்.

Update: 2023-10-25 00:28 GMT

25.10.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 8-ந் தேதி புதன்கிழமை. ஏகாதசி திதி காலை (10.32)க்கு மேல் துவாதசி திதி. சதயம் நட்சத்திரம் பகல் (12.19)க்கு மேல் பூரட்டாதி நட்சத்திரம். சித்தயோகம் பகல் (12.19)க்கு மேல் அமிர்தயோகம். மேல்நோக்கு நாள். முகூர்த்தநாள். சர்வ ஏகாதசி. வெற்றிகள் குவிய விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள்.

நல்லநேரம் : காலை : 9.15-10.15, மாலை : 4.45-5.45

ராகுகாலம் : மதியம்: 12.00-1.30

எமகண்டம் : காலை : 7.30-9.00

குளிகை : காலை: 10.30-12.00

வாரசூலை : வடக்கு

சூரிய உதயம் : 6.11

அதிர்ஷ்ட எண்கள் : 2,5,7.

தினப்பலன்

மேஷம்

எதையும் சாதித்துக் காட்டும் நாள். எடுத்த வேலையை எளிதில் முடிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள்.

ரிஷபம்

கொடுத்தவாக்கை காப்பாற்றும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மிதுனம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்கள் எதிர்பார்த்த உதவி செய்வர். உத்தியோகத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.

கடகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில்பிரச்சினைகள் உருவாகலாம். தொழில் பங்குதாரரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்தழைப்புதர மறுப்பர். வரவேண்டிய பணவரவுகள் தாமதப்படலாம்.

சிம்மம்

கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

புதிய பாதை புலப்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.

துலாம்

சுபச்செய்தி வந்து சேரும் நாள். வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் கவனம் தேவை. பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது, உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

விருச்சிகம்

முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வசதி, வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

தனுசு

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவிற்கேற்ற செலவு ஏற்படும். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

மகரம்

வரவை விட செலவு கூடும் நாள். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தலைமை பொறுப்புகள் தானே தேடி வரலாம். உத்தியோகத்தில் வேறு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

கும்பம்

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்

குடும்ப ஒற்றுமை கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக நலன் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். பாதியில் நின்ற கட்டிடப்பணி தொடரும். கல்யாண முயற்சி கைகூடும்.

பொதுப்பலன்

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணவரவு திருப்தி தரும் நாள். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள்.

சந்திராஷ்டமம்: பின்இரவு 5.09 வரை கடகம் பிறகு சிம்மம்.

Tags:    

மேலும் செய்திகள்