இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்

அசுவதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும் நாள்.

Update: 2023-10-24 00:15 GMT

24.10.2023 சோப கிருது வருடம் ஐப்பசி மாதம் 7-ந் தேதி செவ்வாய்க்கிழமை. தசமி திதி பகல் (12.54)க்கு மேல் ஏகாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் பகல் (1.58)க்கு மேல் சதயம் நட்சத்திரம். சித்தயோகம் பகல் (1.58)க்கு மேல் மரணயோகம். மேல்நோக்குநாள். விஜயதசமி. அட்சராப்பியாசம். ஆனந்த வாழ்வமைய அம்பிகையை வழிபட வேண்டிய நாள்.

நல்லநேரம் : காலை : 7.45-8.45, மாலை : 4.45-5.45

ராகுகாலம் : மதியம்: 3.00-4.30

எமகண்டம் : காலை : 9.00-10.30

குளிகை : காலை: 12.00-1.30

வாரசூலை : வடக்கு

சூரிய உதயம் : 6.11

அதிர்ஷ்ட எண்கள் : 6,8,9.

தினப்பலன்

மேஷம்

அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொட்டது துலங்கும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மறைமுகப் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் கவுரவ பொறுப்புகள் தேடி வரலாம். சமூகநல பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டமுன்வருவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.

கடகம்

பராசக்தியை வழிபட்டு பலன் பெற வேண்டிய நாள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். பயணங்களால் விரயம் உண்டு.

சிம்மம்

அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும் நாள். தன்னம்பிக்கை யோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் வந்த மாற்றம் குழப்பத்தை உருவாக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களை தருவர்.

கன்னி

மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு. தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள்.

துலாம்

உடனிருப்பவர்களின் உதவியால் கடன்சுமை குறையும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஏற்படலாம். நூதன பொருள் சே ர்க்கை உண்டு.

விருச்சிகம்

இன்பங்கள் வந்து சேர அம்பிகையை வழிபட வேண்டிய நாள். நிதிநிலை உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொலைபேசி வழி தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

தனுசு

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நாள்பட்ட நோய்கள் அகலும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். உற்றார், உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவர்.

மகரம்

விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கும்பம்

தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடக்கும் நாள். நண்பர்கள் சுபச்செய்திகளை கொண்டுவந்து சேர்ப்பர். வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புதிய முயற்சிகள் கைகூடும்.

மீனம்

நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். அழகான பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். வாழ்க்கை துணை வழியே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பொதுப்பலன்

அசுவதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும் நாள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள்.

சந்திராஷ்டமம்: கடகம்.

Tags:    

மேலும் செய்திகள்