இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள்.

Update: 2023-10-23 00:12 GMT

23.10.2023 சோப கிருது வருடம் ஐப்பசி மாதம் 6-ந் தேதி திங்கட்கிழமை. நவமி திதி மாலை (3.15)க்கு மேல் தசமி திதி. திருவோணம் நட்சத்திரம் பகல் (3.35)க்கு மேல் அவிட்டம் நட்சத்திரம். அமிர்தயோகம் பகல் (3.35)க்கு மேல் சித்தயோகம். கரிநாள். மேல்நோக்குநாள். அரசு விடுமுறை. சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை. சகல கலைகளிலும் வெற்றி பெற சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள்.

நல்லநேரம் : காலை : 6.15-7.15, மாலை : 4.45-5.45

ராகுகாலம் : மதியம்: 7.30-9.00

எமகண்டம் : காலை : 10.30-12.00

குளிகை : காலை: 1.30-3.00

வாரசூலை : கிழக்கு

சூரிய உதயம் : 6.11

அதிர்ஷ்ட எண்கள் : 5,6,8.

தினப்பலன்

மேஷம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

ரிஷபம்

சந்தோஷம் அதிகரிக்க சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். இடம், பூமி விற்னையால் லாபம் உண்டு. உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.

மிதுனம்

குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். ஆதாயத்தைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

கடகம்

எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் பற்றிய தகவல் உண்டு.

சிம்மம்

காலை நேரத்தில் கலகலப்பும், மாலை நேரத்தில் சலசலப்பும் உருவாகும் நாள். சிந்தித்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் உதவி செய்வதாய் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

கன்னி

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கமான நிலைமாறும். வரவு திருப்தி தரும்.

துலாம்

விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களை தேடி வரலாம். பயணங்கள் பலன் தரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதால் செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

காரிய வெற்றிக்கு கலை வாணியை வழிபட வேண்டிய நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

தனுசு

நாமகளை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

மகரம்

மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கவுரவப் பொறுப்புகள் தேடி வரலாம். கல்யாண கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும்.

கும்பம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்

வளர்ச்சி கூடும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பயணத்தால் பலன் கிடைக்கும். நல்ல தகவல்கள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பொதுப்பலன்

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றிக்கு கலை வாணியை வழிபட வேண்டியநாள்.

சந்திராஷ்டமம்: இரவு 2.48 வரை மிதுனம்; பிறகு கடகம்.

Tags:    

மேலும் செய்திகள்