தீர்த்தவாரி உற்சவம்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் நரசிம்மர் ேகாவிலில் புரட்டாசி திருவோண ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் தெப்பக்குளத்திற்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலசத்தில் வருண ஜெபம் தொடர்ந்து பெருமாளுக்கு தெப்பக்குளத்தில் வைத்து விசேஷ அபிஷேகம், உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலையும், தெப்பக்குளத்தையும் பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதலும் நடந்தது. மாலையில் சாமி கோவிலையும், தெப்பக்குளத்தையும் சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தவலம் வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார், செயல் அலுவலர் இரா.முருகன் தலைமையில் செய்திருந்தனர்.