திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்
கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிறைவு நாளான 10-ம் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 5.35 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதன்பின் கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்குரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.