முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு;
தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை சாமிக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7.30 மணி அளவில் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்துக்குள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதே போல தஞ்சை மேலஅலங்கம், வடக்கு அலங்கம், கீழவாசல் குறிச்சி தெரு, அரிசி கார தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இவற்றிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.