முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெரு முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

Update: 2023-04-22 19:00 GMT

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கரக உற்சவ தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி பால்குட அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிற உடை உடுத்தி பால் குடத்தை தலையில் சுமந்து காவிரி கரையில் இருந்து பம்பை மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. . தொடர்ந்து அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது.பின்னர் முத்துமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் வாயில் 12 அடி முதல் 16 அடி வரை அளவு நீள அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது வழியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள் காலில் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்