பைரவருக்கு சிறப்பு வழிபாடு
திருக்கனூர் கரும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் ஸ்ரீ கரும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதன் பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில்திராளாக பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ வெற்றிவேல் முருகன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ சொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.