நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன், காலபைரவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.