திருப்பதியில் நாளை மறுநாள் தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்

வெங்கமாம்பாவின் அவதார தலமான தரிகொண்டாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் கல்யாணோற்சவம் நடைபெறுகிறது.

Update: 2024-08-11 11:36 GMT

திருப்பதி ஏழுமலையானின் பெருமையை போற்றி பல பாடல்களை இயற்றியவர் துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பா. ஏழுமலையான் கோவிலில் முதல் முதலில் அன்னதானத்திட்டத்தை தொடங்கி வைத்தவரும், வெங்கடாசலபதியின் தீவிர பக்தையுமான தரிகொண்ட வெங்கமாம்பாவின் 207-வது ஆண்டு நினைவு நாள், அவரின் அவதார தலமான தரிகொண்டாவிலும், திருப்பதி மற்றும் திருமலையிலும் நாளை மறுநாள் (ஆகஸ்டு 13) அனுசரிக்கப்படுகிறது.

தரிகொண்டாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அன்று மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கல்யாணோற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு காலை 9 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, திருப்பதியில் உள்ள சுவேத பவனில் காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை இலக்கிய மாநாடு நிகழ்ச்சிகளும், திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் காலை 9 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்