வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. 16-ந் தேதி 9-ம் திருவிழாவில் அருட்தந்தை தேவராஜ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. கிழவனேரி பங்குத்தந்தை பிராக்ரஸ் மறைஉரையாற்றினார். ஆராதனையில் பணகுடி பங்குத்தந்தை வளன், தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி, துணை பங்குத்தந்தை சிபுஜோசப் கலந்து கொண்டனர். இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேர்பவனி நடைபெற்றது.
நேற்று அதிகாலை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி, காலை புனிதரின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்டு ரவி, துணை பங்குத்தந்தை சிபுஜோசப், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.