சேலம் கோட்டை மாரியம்மன் சிறப்புகள்

திருமணம் மற்றும் நல்ல காரியங்களுக்கு கோட்டை மாரியம்மனிடம் பூப்போட்டு பார்த்து அனுமதி பெற்றுத் தான் செய்வார்கள்.

Update: 2024-08-08 05:25 GMT

1. சேலம் மாநகரில் கோட்டை மாரியம்மன், அம்மாபேட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மா பேட்டை மாரியம்மன் ஆகிய 8 அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த 8 அம்மன் கோவில்களில் முதன்மையானது கோட்டை மாரியம்மன் ஆலயம். இந்த அம்மன் தான் பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

2. சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் நவக்கிரகங்களுக்கும் நாயகி என்பதால் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற காலங்களில் கூட கோவில் நடை சாத்தப்படுவதில்லை. கிரகண காலங்களின்போது இந்த கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்படும்.

3. சேலம் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

4. மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒப்பானது சேலம் கோட்டை மாரியம்மன் ஆடி மாதத் திருவிழா. ஆடி பதினெட்டு முடிந்து வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் திருவிழா நடைபெறும்.

5. பெருமாளின் தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிதிருவிழா அன்று பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு செல்வது இன்று வரை நடை முறையில் உள்ளது.

6. திருமணம் மற்றும் நல்ல காரியங்களுக்கு கோட்டை மாரியம்மனிடம் பூப்போட்டு பார்த்து அனுமதி பெற்றுத் தான் செய்வார்கள். அம்மனின் அனுமதி கிடைக்காவிட்டால் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.

7. புதிதாக வாங்கும் தங்க நகைகள், தாலி உள்ளிட்டவை கோட்டை மாரியம்மன் மடியில் வைத்து சிறப்பு பூஜை செய்து தான் பெரும்பாலான பெண்கள் அணிவார்கள்.

8. வாரந்தோறும் சிலர் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் தெய்வமாக காத்து வந்தார்.

9. திருமணி முத்தாற்றின் கரையில் அமைய பெற்றுள்ள கோட்டை மாரியம்மனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணி முத்தாற்றில் இருந்து புனித நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

10. ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழாவின் போது கம்பம் நடப்படும். அடுத்த நாள் திருமணம் ஆகாத பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்வார்கள். மேலும் தங்களுக்கு விரைவில் திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டி கொள்வார்கள்.

11. கோட்டை மாரியம்மனை நினைத்து தங்கள் பிரச்சினைகள் குறித்து வேண்டி கொள்ளும் பக்தர்கள் அந்த பிரச்சினை தீர்ந்ததும் நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், உருளுதண்டம் போடுதல், மண் உரு சாத்துதல், கண்ணடக்கம் சாத்துதல். உருவாரம் சாத்துதல், அடியளந்து கொடுத்தல், பலிபீடத்தின் மீது உப்பு மிளகு போட்டு வருகிறார்கள்.

12. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழாவின் போது எப்படியும் மழை கொட்டிவிடும். அம்மன் மனம் குளிரும் போது மக்களும் குளிரும் வகையில் மழையும் கொட்டும்.

13. சேலம் நகரில் எங்கும் இல்லாத வகையில் கோட்டை மாரியம்மன் கோவிலில் 81 அடி உயரத்தில் ராஜ கோபுரம் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்