ஏழுமலையான் கோவிலில் 27-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தான உற்சவம்

உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் உறியடி உற்சவ நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

Update: 2024-08-21 09:29 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 27-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தான உற்சவம் நடைபெறுகிறது. கோவில் தங்க வாசல் முக மண்டபத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை சர்வ பூபால வாகனத்தில கிருஷ்ணர் எழுந்தருளி காட்சியளிக்கிறார். அதன்பின்னர் உக்கிர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதன்பின்னர் துவாதச ஆராதனை நடைபெற உள்ளது.

28-ந் தேதி உறியடி உற்சவம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மலையப்ப சுவாமி மற்றும் கிருஷ்ணர் தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் பாரம்பரிய வழக்கப்படி பானை உடைக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாக்களைக் கருத்தில் கொண்டு, 28-ம் தேதி சஹஸ்ர தீபாலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற அனைத்து ஆர்ஜித சேவைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்