ஐந்தாய் அமைந்த பெருமாள் ஆலயங்கள்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களான ராமர் மற்றும் கிருஷ்ணரின் பெருமை சொல்லும் ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச ராமர் தலங்கள்’, பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று ேபாற்றப்படுகின்றன.

Update: 2022-07-08 13:45 GMT

அதே போல் காவிரி பாயும் கரைகளில் மேடான பகுதியில் அமைந்த தலங்கள் 'பஞ்ச அரங்க தலங்கள்' எனப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பஞ்ச ராமர் தலங்கள்

ராமபிரான் அருள்பாலிக்கும் இந்த தலங்கள் அனைத்தும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன. இந்த ஐந்து தலங்களும் 'பஞ்ச ராமர் தலங்கள் எனப்படுகின்றன.

1. முடிகொண்டான் ராமர் கோவில்

2. அதம்பார் கோதண்டராமர் கோவில்

3. பருத்தியூர் ராமர் கோவில்

4. தில்லைவிளாகம் வீரகோதண்டராமர்

கோவில்

5. வடுவூர் கோதண்டராமர் கோவில்

பஞ்ச கிருஷ்ண தலங்கள்

1. லோகநாதப் பெருமாள் கோவில் - திருக்கண்ணங்குடி

2. நீலமேகப் பெருமாள் கோவில் - திருக்கண்ணபுரம்

3. பக்தவச்சலப் பெருமாள் கோவில்

- திருக்கண்ணமங்கை

4. கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் - கபிஸ்தலம்

5. உலகளந்தப் பெருமாள் கோவில் - திருக்கோவிலூர்

பஞ்ச அரங்க தலங்கள்

காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து இடங்களையே 'பஞ்ச அரங்க தலங்கள்' என்கிறோம். 'ரங்கம்' என்றால் 'நதி பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி' என்று பொருள். 'ரங்கம்' என்பதற்கு அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் உண்டு. இந்த பஞ்ச அரங்க தலங்களில் ஒன்று கர்நாடகாவிலும், மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் அமையப்பெற்றுள்ளன.

1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம்

(கர்நாடக மாநிலம்)

2. மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)

3. அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)

4. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில்,

கும்பகோணம் (தமிழ்நாடு)

5. பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில்

திருஇந்தளூர், மாயவரம் (தமிழ்நாடு)

Tags:    

மேலும் செய்திகள்