திருமலை கோவிலில் பவித்ர உற்சவம் ஆரம்பமானது

திருமலை கோயிலில் பவித்ர உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

Update: 2022-08-08 21:25 GMT

திருமலை:

திருமலை கோயிலில் பவித்ர உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் பவித்ரா பிரதிஷ்டை நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீ மலையப்பசுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி சம்பங்கி பிராகாரம்யாக சாலைக்கு கொண்டு வந்தனர். அங்கு ஹோமங்கள் மற்றும் காரியா கிரமங்கள் நடத்தப்பட்டன.

சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற சுகந்தாவாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. மாலை 4 மணிக்கு சுவாமி, தாயாருக்கு சிறப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டது

மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோயிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீ மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.

இதையொட்டி சிறப்பு ஆபரணங்களால்அலங்காரம் செய்யப் பட்டது. இரவு 8 மணி முதல் 11 மணி வரை யாகசாலையில் காரிய கிரமங்கள் நடைபெற்றது. பவித்ர உற்சவம் காரணமாக கல்யாணோத்ஸவம், ஊஞ்சல்சேவை, பிரம்மோத்ஸவம், சஹஸ்ரதி பாலங்கர சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ பெத்தஜெயர்சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்னஜெயர்சுவாமி,டி.டி.டி இ.ஓ தர்மரெட்டி தம்பதிகள், கோயில் துணை இ.ஓ ரமேஷ்பாபு, வி.ஜி.ஓ பால் ரெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்