இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சிறப்பு சோமவார அபிஷேகம்.

Update: 2023-12-04 05:36 GMT

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-18 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சப்தமி இரவு 10.15 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: மகம் நள்ளிரவு 1.18 மணி வரை. பிறகு பூசம்.

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடவாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்சுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சிறப்பு சோமவார அபிஷேகம்.

ராசிபலன்

மேஷம்- யோகமான நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப் போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். நூதனப் பொருள் சேர்க்கையுண்டு.

ரிஷபம்- வீண்பழிகள் அகலும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். வாகன யோகம் உண்டு. தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண் டாம். வங்கிகளில் வைப்புநிதி உயரும். உறவினர்கள் உதவி உண்டு.

மிதுனம்- பஞ்சாயத்துகளால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூட பிறந்தவர்களின் வருகை உண்டு. அண்டி வந்தவர்களிடம் அன்பு செலுத்துவீர்கள்.

கடகம்- முயற்சிகள் கைகூடும் நாள். முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு காரணமானவர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

சிம்மம்- வளர்ச்சி கூடும் நாள். வராத பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீடு மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

கன்னி- துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்போடு செயல்படு வீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை கிட்டும்.

துலாம்- வருமானம் திருப்தி தரும் நாள். திட்டமிட்டு செயலாற்றி சிறப்பு பெறுவீர்கள். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நிறைவேறும். நண்பர்களின் நண்பர்களின் மத்தியில் தனி முத்திரை பதிப்பீர்கள்.

விருச்சிகம்-தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். கல்யாண முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

தனுசு- பற்றாக்குறை அகலும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. மன அமைதிக்காக ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.

மகரம்- கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். வியாபார போட்டிகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உண்டு. உடல்நலத்தில் அக்கறை அக்கறை செலுத்துவது நல்லது.

கும்பம்- தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். ஒளிமயமான எதிர் காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.

மீனம்- ஊக்கத்தோடும், உற்சாகத் தோடும் பணிபுரியும் நாள். குடும் பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

Tags:    

மேலும் செய்திகள்