இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

Update: 2023-12-03 05:01 GMT

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-17 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சஷ்டி இரவு 8.10 மணி வரை, பிறகு சப்தமி

நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 10.45 மணி வரை, பிறகு மகம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று சூரியானார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

ராசிபலன்

மேஷம்- பூசல்கள் அகன்று புதிய பாதை புலப்படும் நாள். வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். தொழில் ரீதியாக வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரலாம்.

ரிஷபம்- வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தந்தை வழியில் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்-மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைத்த வேலையொன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வாகன பராமரிப்பில் ஆர்வம் கூடும்.

கடகம்- காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். கல்யாண முயற்சி கைகூடும். கூட்டு தொழிலில் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

சிம்மம்-சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை பெறவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியை ஏற்படுத்தும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும்.

கன்னி-இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதுபற்றி யோசிப்பீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.

துலாம்-கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

விருச்சிகம்-தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு- தெய்வ வழிபாடுகளால் திருப்தி ஏற்படும் நாள். எதை செய்தாலும் யோசித்து செய்வது நல்லது கொடுக்கல், வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவார்கள்.

மகரம்- அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். அலைச்சலுடன் கூடிய ஆதாயமும் கிட்டும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள்.

கும்பம்- மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடலாம். வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

மீனம்- யோகமான நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்