இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

உப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

Update: 2023-11-25 05:29 GMT

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-9 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திரயோதசி மாலை 5.13 மணி வரை, பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: அசுவினி பிற்பகல் 3.19 மணி வரை, பிறகு பரணி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், தங்கக் குதிரை வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் பவனி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

ராசிபலன்

மேஷம்: செல்வாக்கு உயரும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் கூடும். உத்தியோக முயற்சி பலன் தரும்.

ரிஷபம்: செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்க செய்யும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.

மிதுனம்: உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

கடகம்: யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படும்.

சிம்மம்: கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. காரிய வெற்றிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

கன்னி: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் அலைச்சல் ஏற்படுமே தவிர ஆதாயம் குறையும். உத்தியோகத்தில் வீண் பழிகள் உண்டாகலாம்.

துலாம்: தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன் பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

விருச்சிகம்: வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொது வாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வாகன யோகம் உண்டு.

தனுசு: வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மகரம்: வருமானம் திருப்தி தரும் நாள். இருப்பினும் வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

கும்பம்: வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மீனம்: சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும்.

சந்திராஷ்டமம்: கன்னி

Tags:    

மேலும் செய்திகள்