இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

Update: 2023-11-17 05:49 GMT

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 1 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சதுர்த்தி நண்பகல் 12.03 மணி வரை, பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.45 மணி வரை, பிறகு உத்திராடம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் பவனி. பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகாசூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

ராசிபலன்

மேஷம் - யோகமான நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவுவர். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.

ரிஷபம் -விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உண்டு.

மிதுனம் - பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

கடகம் - நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். வரன்கள் வாயில்தேடி வரும்.

சிம்மம் - பணவரவு திருப்தி தரும் நாள். அலுவலகப்பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி - தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்கு பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும்.

துலாம் - வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை பார்த்து மற்றவர்கள் வியப்படைவர். நேர்முகத் தேர்வில் வெற்றியுண்டு.

விருச்சிகம் - புகழ் கூடும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். பூமி வாங்கும் எண்ணம் கைகூடும்.

தனுசு - விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். பணப்பற்றாக்குறை அகலும். தாமதமாக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்துவிடுவீர்கள்.

மகரம் - முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.

கும்பம் - மகிழ்ச்சி கூடும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

மீனம் - மனக்குழப்பம் அகலும் நாள். கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாக திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம், பக்கத்தினரின் பகை விலகும்.

Tags:    

மேலும் செய்திகள்