இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

Update: 2023-11-15 05:23 GMT

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 29 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவிதியை பிற்பகல் 2.40 மணி வரை, பிறகு திருதியை

நட்சத்திரம்: கேட்டை நாளை விடியற்காலை 4.31 மணி வரை, பிறகு மூலம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் வெண்ணைத்தாழி சேவை. சோலைமலை முருகர் கோவிலில் யானை வாகனத்தில் பவனி. குமாரவயலூர் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. மாயவரம் கவுரிமாயூர நாதர் ரதோற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

ராசிபலன்

மேஷம்: எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகம், சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்: தடைகள் அகலும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்கும் எண்ணம் கைகூடும்.

மிதுனம்: சகோதரரால் அனுகூலம் ஏற்படும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகள் தீரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

கடகம்: உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலுக்காக எடுத்த புதுமுயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

சிம்மம்: வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அடிப்படை வசதி வாயப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.

கன்னி: செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் இடமாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவர். பயணங்களில் கவனம் தேவை.

துலாம்: துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீங்கள் தேடிச்செல்ல நினைத்த ஒருவர் உங்கள் இல்லம் தேடி வருவார்.

விருச்சிகம்: தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

தனுசு: சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். உறவினர்களின் உதவிகளை பெற்று மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

மகரம்: பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர்.

கும்பம்: முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய வகையில் நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும். திருமணத்தடை அகலும். நண்பர்களின் ஆதரவோடு தொழில் வளர்ச்சியை காண்பீர்கள்.

மீனம்: சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு. கிளைத்தொழில்கள் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்