இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.

Update: 2023-12-13 05:20 GMT

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-27 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பிரதமை நாளை விடியற்காலை 4.35 மணி வரை, பிறகு துவிதியை

நட்சத்திரம்: கேட்டை நண்பகல் 12.18 மணி வரை, பிறகு மூலம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம். சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். மூர்க்க நாயகனார் குருபூஜை ஸ்ரீவில்லி புதூர் வேதபிரான் பட்டர் திருமாளிகை பச்சைபரப்பி கடாட்சித்து பெரிய பெருமாள் கருடன் பட்டர்பிரான் யானை திருப்பல்லாண்டு தொடக்கம். கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்- திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லும்நாள். யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முடிவை ஓரிரு நாட்கள் தள்ளிவைக்க நேரிடும்.

ரிஷபம்- மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது. விரயம் உண்டு.

மிதுனம்- மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

கடகம்- அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். முயற்சிகளில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் கிடைக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

சிம்மம்- உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி கைகூடும்.

கன்னி- வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்- வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். இடம் சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்- தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

தனுசு- யோகமான நாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நீங்கள் செய்த உதவிக்கு பதில் உதவி கிடைக்கும். வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

மகரம்- மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

கும்பம்- ஏமாற்றங்கள் அகல எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளை கடைசி நேரத்தில் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்- நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்