இன்றைய ராசி பலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ கண்ணன் திருக்கோலமாய் காட்சி.

Update: 2024-01-10 05:44 GMT

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-25 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தசி இரவு 8.04 மணி வரை பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: மூலம் இரவு 7.44 மணி வரை பிறகு பூராடம்

யோகம்: மரண, அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப் பரங்கி நாற்காலியில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொத்துகளால் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். திடீர் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்டும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் கூடும். வெளிவட்டார பழக்கவழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை.

மிதுனம்: அடுத்தவர்களுக்கு உதவிசெய்து ஆனந்தம் காணும் நாள். உறவினர்கள் வழியே வந்த பிரச்சினை அகலும். எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அந்த காரியம் எளிதில் முடிவடையும்.

கடகம்: செல்வாக்கு மேலோங்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பழைய கடன்களை அடைக்க எடுத்த முயற்சி பலன் தரும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

சிம்மம்: வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி: அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு உண்டு. கடிதம் கனிந்த தகவலை தரும்.

துலாம்: உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உடல்நிலை தொல்லை அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பணவரவு திருப்தி தரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு: கவலைகள் தீரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

மகரம்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியமொன்று இன்று நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

கும்பம்: சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். தடைகள் அகலும். எதிரிகள் விலகுவர். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும்.

மீனம்: மனக்குழப்பம் ஏற்படும் நாள். சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லும். உறவினர் பகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வரவை விட செலவு கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்