இந்த வார விசேஷங்கள் (26-3-2024 முதல் 1-4-2024 வரை)

மார்ச் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத்தேரில் பவனி.

Update: 2024-03-26 09:20 GMT

26-ந் தேதி (செவ்வாய்)

* பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் ரத உற்சவம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

* சமநோக்கு நாள்.

27-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல்.

* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (வியாழன்)

* சங்கடஹர சதுர்த்தி.

* திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் எண்ணெய்க் காப்பு.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல்,

* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

29-ந் தேதி (வெள்ளி)

* புனித வெள்ளி.

* திருக்குறுங்குடி 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி அம்ச வாகனத்தில் வீதி உலா.

*திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

*திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத்தேரில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (சனி)

* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

*திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் பவனி.

* சென்னை மல்லீஸ்வரர், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமான் கோவில்களில் விடையாற்று உற்சவம்.

* சமநோக்கு நாள்.

31-ந் தேதி (ஞாயிறு)

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பஞ்சமுக அனுமனுடன் ராமர் திருக்கோலக் காட்சி.

* உப்பிலியப்பன் திருப்பல்லக்கிலும், இரவு தாயார் வெள்ளி கமல வாகனத்திலும் புறப்பாடு.

* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

* சமநோக்கு நாள்.

1-ந் தேதி (திங்கள்)

* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

* உப்பிலியப்பன்கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கில் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

Tags:    

மேலும் செய்திகள்