இந்த வார விசேஷங்கள் (30-1-2024 முதல் 5-2-2024 வரை)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் பிப்ரவரி 1-ம் தேதி ராமருக்கு திருமஞ்சனம்.
30-ந் தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* வைத்தீசுவரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி பவனி வருதல்.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* வைத்தீசுவரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
பிப்ரவரி 1-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தாிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
பிப்ரவரி 2-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
பிப்ரவரி 3-ந் தேதி (சனி)
* திருச்சேறை சாரநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* வைத்தீசுவரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி பவனி வருதல்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.
பிப்ரவரி 4-ந் தேதி (ஞாயிறு)
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமான் பாலாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
பிப்ரவரி 5-ந் தேதி (திங்கள்)
* திருமயம் ஆண்டாள் பிரியாவிடை உற்சவம், எண்ணெய் காப்பு உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.