ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 5 கருட சேவை
ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அன்ன வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று இரவு தொடங்கி விடிய விடிய ஆடிப்பூர பந்தலில் 5 கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. பெரிய பெருமாள், ரங்கமன்னார், திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள், செண்பகத்தோப்பு சுந்தரராஜ பெருமாள், திருத்தங்கல் நின்றநாராயணப் பெருமாள் கருட வாகனங்களில் எழுந்தருளினர். ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அன்ன வாகனங்களிலும் எழுந்தருளினர்.
இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.