17-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி ஆஸ்தானம்

வருகிற 17-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி ஆஸ்தானம் நடக்கிறது.;

Update: 2024-03-31 15:17 GMT

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 17-ந்தேதி ராம நவமி விழா நடக்கிறது. அன்று காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருடன் அனுமனுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடக்கிறது. இதனால், 17-ந்தேதி கோவிலில் நடக்கும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 18-ந்தேதி இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை கோவிலில் உள்ள தங்கவாசலில் ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்